தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
"பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கவே பிடிக்கலை" புலம்பி தள்ளிய கோபி..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிரபலமான சீரியல் ஒன்றுதான் பாக்கியலட்சுமி தொடர். விவாகரத்தான பெண்ணின் வளர்ச்சியையும் அந்த பெண் எப்படி தனியாக வாழ்வார் என்பதையும் பாக்கியலட்சுமி சீரியலில் காட்சிப்படுத்துவதால் இந்த சீரியல் மக்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறது.
மேலும் டி ஆர் பியில் முன்னணியில் இருந்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் பாக்கியலட்சுமியின் கணவராக வருபவர் தான் கோபி. இவர் தற்போது பாக்கியலட்சுமியுடன் விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதன் மூலம் இவர் ராதிகாவினால் படும் கஷ்டத்தையும், பாக்கியலட்சுமியின் வளர்ச்சியையும் கண்டு பொறாமைப்படும் வில்லன் கதாபாத்திரத்திற்கு பிறகு இந்த சீரியலில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் இவர் பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகுகிறார் என்ற செய்தி இணையத்தில் பரவியது.
இந்நிலையில் தற்போது மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட கோபி "பாக்கியலட்சுமி சீரியலில் யார் கதாநாயகன், யார் வில்லன் என்பது தெரியவில்லை. இந்த சீரியலில் வில்லனாக நடிக்க பிடிக்கவில்லை. முயற்சி செய்கிறேன் என்ன நடக்குது என்று பார்க்கலாம்" என்று மன வருத்தத்துடன் பேசினார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.