#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கண்ணம்மா சீரியலில் பேரதிர்ச்சி.. தீவிரவாதிகளால் சூழப்பட்ட மருத்துவமனை.. நடக்கப்போவது என்ன? பகீர் வீடியோ..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த தொடர் கண்ணம்மா. இத்தொடரில், நாயகன் - நாயகி இடையே நடக்கும் சண்டையில் பிரிக்கப்பட்ட இரட்டை குழந்தைகள் மீண்டும் தங்களின் பெற்றோருடன் இணையவிருப்பது குறித்த கதையம்சம் இடம்பெற்று இருக்கும்.
கண்ணம்மா தொடரில் பல விறுவிறுப்பு வாரங்கள் நிறைவு பெற்று இருக்கிறது. இறுதியாக குழந்தைகள் தங்களின் பெற்றோரை மக்கள் முன்னிலையில் அறிவார்களா? மாட்டார்களா? என்ற ஏக்கம் தொடங்கி அது பொய்த்துப்போனது. ஆனால், சகோதரிகள் இருவருக்கும் தங்களின் பெற்றோர் குறித்த விபரம் மட்டும் தெரிந்தாலும், அதனை நாயகன் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த நிலையில், இன்று விஜய் டிவி நிர்வாகம் வெளியிட்டுள்ள கண்ணம்மா தொடரின் ப்ரமோ காட்சியில், "கண்ணம்மாவின் பெயரை கூறி வேலைக்கு வரும் சிலர், மருத்துவமனையை கடத்த திட்டமிட்டுள்ளது தெரியவருகிறது" என்பதை சுட்டிக்காட்டும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதனால் கண்ணம்மாவின் மருத்துவமனை பயங்கரவாதிகளால் கடத்தப்படுமா? இதில் கண்ணம்மா என்னசெய்யபோகிறார்? பயங்கரவாதிகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்? என்ற விறுவிறுப்புடன் இவ்வார தொடர் பரபரப்புடன் ஒளிபரப்பாகும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.