#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னை மன்னிசிடுங்க.. தொடரில் இருந்து விலகிய பாரதி கண்ணம்மா ரோஷினி வெளியிட்ட வீடியோ! கடும் வருத்தத்தில் ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களை கவரும் வகையில் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த தொடரில் பாரதியாக அருண்பிரசாத் மற்றும் கண்ணம்மாவாக ரோஷினி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தனர். மேலும் தற்போது தொடர் மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் திடீரென தொடரிலிருந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி விலகியுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக புதிய கண்ணம்மாவாக வினுஷா என்பவர் நடித்து வருகிறார்.
#BarathiKannamma #RoshiniPriyan pic.twitter.com/UDjA2BLKeQ
— chettyrajubhai (@chettyrajubhai) November 15, 2021
இந்த நிலையில் தொடரில் இருந்து விலகியது குறித்து ரோஷினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், என்னால் சில காரணங்களால் பாரதி கண்ணம்மா தொடரில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. எனது இந்த முடிவு உங்களை காயப்படுத்தியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.
நீங்கள் இல்லை என்றால் என்னால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. எதிர்காலத்திலும் இதே போல ஆதரவை எனக்கு தருவீர்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.