மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பல நாள் கனவு.. வீட்டிலேயே பார் செட்டப்! செம ஹேப்பி மூடில் பிரபல பிக்பாஸ் நடிகை வெளியிட்ட வீடியோ.!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருப்பவர் ஜனனி ஐயர். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யாவின் அசத்தலான நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற அவன் இவன் படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இப்படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜனனி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடிய அவர் நான்காவது இடத்தை பிடித்தார். அதனை தொடர்ந்து அவருக்கு மேலும் ரசிகர்கள் உருவாகினர். பின்னர் அவர் கூர்மன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் ஜனனி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பகிரா படத்திலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி அவர் யாக்கை திரி மற்றும் முன்னறிவான் படங்களில் நடித்து வருகிறார்.
ஜனனி ஐயர் எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவார். அவ்வாறு அவர் தற்போது பார் செட்டப்பில் இருக்கும் தனது வீட்டின் புகைப்படத்தை பகிர்ந்து எனது கனவு வீடு. பல நாள் கனவு நடந்துவிட்டது என ஹேப்பியாக பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.