மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. லேடி சூப்பர் ஸ்டார் படத்தில் இந்த பிக்பாஸ் பிரபலமும் இருக்காரா.! செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்!!
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஏராளமான சண்டைகள் போட்டு, கன்டென்ட் குயினாக வலம் வருபவர் பூர்ணிமா. இவர் யூடியூபில் பல வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர். இவர் பின் தனக்கென அங்கீகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
பூர்ணிமா பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் நடித்த படங்கள் குறித்து எதுவும் கூறாத நிலையில், அவர் நயன்தாராவுடன் இணைந்து நடித்த படத்தின் புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். நயன்தாராவின் 75வது படம்தான் அன்னபூரணி
இப்படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக ஜெய் மேலும் சத்யராஜ்,ரெடின் கிங்ஸ்லி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சங்கரின் உதவி இயக்குனரான நிலேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.
அன்னபூரணி படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில் ஒரு காட்சியில் நயன்தாராவின் அருகில் பிக்பாஸ் பூர்ணிமா இருப்பதை கண்ட ரசிகர்கள் அதனை இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இப்படம் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாக உள்ளது.