தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
என்னை சொல்லாதீங்க! பொங்கியெழுந்து கோபத்தின் உச்சிக்கு சென்ற ரியோ! சுரேஷுக்கு விடுத்த எச்சரிக்கை! வைரலாகும் வீடியோ!
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் தொடங்கப்பட்டு ஒரு வாரம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் நாளுக்கு நாள் வாக்குவாதங்கள், மோதல்கள், உற்சாகங்கள் என எதற்கும் குறைவில்லாமல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டுள்ளது.
மேலும் வார இறுதியில் கமல் அனைத்து போட்டியாளர்களுடன் உரையாடி பல பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் பிக்பாஸ் வீட்டின் அடுத்த வாரத்திற்கான தலைவராக சுரேஷ் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
#Day8 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/1EXR3bkMgJ
— Vijay Television (@vijaytelevision) October 12, 2020
அதில், சுரேஷிடம், பாலாஜி யார் யார் எல்லாம் முகமூடி போட்டு இருக்கிறார்கள் என கேள்வி எழுப்புகிறார். அப்பொழுது அவர் ரியோவை குறித்து கூற வருகையில், உடனே கொதித்தெழுந்த ரியோ என்னை சொல்லாத்தீங்க, சொல்லக்கூடாது என கோபத்துடன் எச்சரிக்கிறார். மேலும் நான் மறைக்க நினைகிற முகம் இதுதான். அவர் யாரை வேணுமானாலும் சொல்லட்டும் ஆனால் என்னை சொல்லகூடாது தம்பி என பாலாஜியிடம் கூறியுள்ளார். இதனால் மீண்டும் மோதல் உருவாகலாம்.