மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் பிரபலத்திற்கு அடித்த ஜாக்பாட்.. விஜய்68 படத்தில் கிடைத்த வாய்ப்பு.!
மறைந்த பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன். "பாண்டவர் பூமி" படத்தில் வரும் தோழா தோழா பாடல் மூலம் பின்னணிப் பாடகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் யுகேந்திரன். மேலும் இவர் ஒரு நடிகராகவும், இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
2007ம் ஆண்டு "வீரமும் ஈரமும்" படத்திற்கு இசையமைத்துள்ளார் யுகேந்திரன். தொடர்ந்து சில படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், பொள்ளாச்சி சந்தையில, விளக்கு ஒன்னு திரிய பாக்குது, ஓ மரியா, கோழி வந்ததா முதலில் முட்டை வந்ததா உள்ளிட்ட பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.
மேலும் பூவெல்லாம் உன் வாசம், பகவதி, திருப்பாச்சி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, யுத்தம் செய், நியூட்டனின் மூன்றாம் விதி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த யுகேந்திரன் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்டார்.
இதன் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ள யுகேந்திரன், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜயின் 68வது படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு யுகேந்திரன் விஜயுடன் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.