#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திடீரென மாற்றப்பட்ட பிக் பாஸ் பைனல் தேதி! ஒருவாரம் தள்ளி வைக்க முடிவு? என்ன நடக்கிறது?
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஷோ பிக் பாஸ். இதன் சீசன் ஒன்று மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து சீசன் இரண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் சீசன் ஓன்று அளவிற்கு சீசன் இரண்டு ஓடவில்லை என்பதுதான் உண்மை.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. இதுவரை 79 நாட்கள் முடிவடைந்துள்ளது.
வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் என்று தான் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இரண்டாவது சீசனை ஒருவாரம் நீடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதனால் செப்டம்பர் 24ம் தேதி முடிய வேண்டிய ஷோ செப்டம்பர் 30ம் தேதி தான் முடியுமாம். இதுவரை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் எதுவும் ரசிகர்களை அதிகம் ஈர்க்காத நிலையில் தற்போது ஒருவாரம் அதிகரித்து புதிதாக என்ன விஷயம் செய்துவிடபோகிறார்கள் என ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.