திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இவர்தான் இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்! வைரலாகும் வீடியோ.
பிக்பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர் ஒருவர் வெளியேறும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.
16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் நான்கு தற்போது மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. போட்டியின் இரண்டாவது வாரம் நடிகை ரேக்கா வெளியேற்றப்பட்டார். கடந்த வாரம் பாடகர் ஆஜித் வெளியேற இந்தநிலையில் அவர் தன்னிடம் இருந்த எவிக்சன் ப்ரீ பாஸை வைத்து தப்பித்துக்கொண்டார்.
இந்நிலையில் இந்தவாரம் 11 பேர் வீட்டில் இருந்து வெளியேற நாமினேட் செய்யப்பட்டிருந்தநிலையில் பாடகர் ஆஜித் மற்றும் வேல்முருகன் இருவரும் குறைவான வாக்குகள் பெற்றிருப்பதால் இவர்கள் இருவரில் ஒருவர்தான் இன்று வீட்டில் இருந்து வெளியேற போகிறார் என்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ள ப்ரோமோ வீடியோவில் நடிகர் கமல் அஜித்திடம் இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என கேட்கிறார், ஆஜித் மவுனம் காக்க, வேல்முருகன் நான் வெளியே போவேன் என நினைப்பதாக கமல்ஹாசனிடம் கூறுகிறார். அதற்கு நீங்கள் இப்போது ஜோதிடர் ஆகிவிட்டீர்களா என்று நகைச்சுவையாக கேட்கிறார் கமல்ஹாசன்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் போட்டியாளர் ஒருவரை வீட்டில் இருந்து வெளியே அனுப்பிவைக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. பாடகர் வேல்முருகன்தான் இந்த வாரம் வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.