#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக் பாஸ் வீட்டை விட்டு இன்று வெளியேற போறது யார் தெரியுமா? வெளியில் கசிந்தது ரகசியம்!
நடிகர் கமலகாசன் தொகுத்துவழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதன் சீசன் ஓன்று மாபெரும் வெற்றி பெட்ரா நிலையில் இதன் இரண்டாவது சீசன் தொடங்கி அது முடியும் தருவாயில் உள்ளது.
இதன் ஆரம்பத்தில் மக்கள் அவ்வளவாக சீசன் இரண்டை விரும்பவில்லை. ஆனால் போட்டியின் இறுதி நாட்கள் நெருங்க நெருங்க மக்களிடமும் ஆர்வம் தொற்றி கொண்டது.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாராவாரம் நடக்கும் எலிமினேஷனில் கடந்த வாரம் மகத் வெளியேறினார். மகத் எலிமினேட் ஆக வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பமாகவும் இருந்தது. அதை தான் பிக் பாஸும் நிறைவேற்றி இருக்கிறார். இதில் இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டுக்கு எப்படியும் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா வர வேண்டும் என மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.
ஆனால் மிகவும் தந்திரமாக செயல்பட்டு பிக் பாஸ் ஐஸ்வர்யாவை காப்பாற்றி விட்டார். இதனால் ஜனனி, டேனியல், பாலாஜி மூவரும் தேர்வு செய்யப்பட்டனர். இதில் நடிகை ஜனனி ஐயருக்கு அதிக ரசிகர்கள் இருப்பதால் அவர் இந்தா வாரம் காப்பாற்றப்படுவது உறுதியாகிவிட்டது. எனவே மீதமுள்ளது பாலாஜி மற்றும் டேனியல் இருவரும்தான்.
அதேபோன்று பாலாஜிக்கு ரசிகர்கள் உள்ளார். இவர் என்னதான் பீப் வார்த்தைகள் பேசினாலும் இவரையும் மக்கள் காப்பாற்றிவிடுவார்கள் என நம்பிக்கை உள்ளது.
ஆனால் டேனி விஷயம் அப்படி இல்லை. டேனி ஏற்கனவே பல குள்ளநரித்தனங்களில் பிக் பாஸ் வீட்டில் அரங்கேற்றி, நரி என்ற பட்டத்தையே வாங்கி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் வீட்டினுள் நடக்கும் பல சண்டைகளுக்கு இவர் தான் மறைமுக காரணமே. இவை எல்லாம் சக போட்டியாளர்கள் அறிந்திராவிட்டாலும் மக்கள் அறிவார்கள். இதனால் டேனிக்கு அவ்வளவு நல்ல பெயர் இந்த நிகழ்ச்சியில் கிடையாது.
மேலும் பிக் பாஸில் ஒவ்வொரு வாரமும் யார் வெளியேறப்போகிறார் என பொதுவாக நடத்தப்படும் கருத்துகணிப்பிலும் டேனியின் பெயர் தான் வந்திருக்கிறது. எலிமினேஷனுக்கான நாள் நெருங்கிவிட்டதால் இனி இந்த விஷயத்தில் பெரிய அளவிலான மாற்றம் எதுவும் வர வாய்ப்பில்லை. அப்படியே டேனி வெளியேறவில்லை என்றால் அடுத்த இடத்தில் பாலாஜி தான் நிச்சயமாக ஜனனி எலிமினேட் ஆக மாட்டார் என்பது மட்டும் உறுதி.