#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆத்தாடி.. பிக்பாஸ் ஆயிஷாவுக்கு இத்தனை திருமணம் நடந்துருக்கா?.. விவாகரத்து வேற.. உண்மையை உடைத்த முன்னாள் காதலர் ..!!
விஜய் தொலைக்காட்சியில் 6-வது சீசனில் அடியெடுத்து வைத்து ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியவர் நடிகை ஆயிஷா. இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா தொடரில் நடித்து பிரபலமானவர். இந்த போட்டியில் பலரும் தங்களின் வாழ்க்கை நிகழ்வுகள் குறித்து பேசியிருந்த நிலையில், ஆயிஷா மட்டும் அதுதொடர்பாக எந்த உண்மையும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் அவர் குறித்து முன்னாள் காதலர் தேவ் சமீபத்தில் அளித்த பேட்டியானது பெரிதும் வைரலானது. அதில் "ஆயிஷாவுக்கு இளம் வயதிலேயே திருமணமான நிலையில், முதல் திருமணத்தை தொடர்ந்து, 18 வயதில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
அந்த திருமணமும் சரிவராததால் அவரைப்பிரிந்து வந்த நிலையில், சென்னையில் படிக்க வந்த இடத்தில் தன்னை சந்தித்து காதலிக்க தொடங்கினார் என்று கூறினார். எனது மூலமாக தொடர்களில் நடிக்க தொடங்கி பின்னர், என்னை அவர் கைவிட்டு விட்டார். தற்போது வேறொருவன் காதல் வயப்பட்டு இருப்பதாக தெரிகிறது" என்று கூறினார்.