மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோடி கோடியாய் செலவழித்த படங்கள் தான் ஓட வேண்டும் என்பதில்லை! கைதி படம் பற்றி அதிரடியாக பேசிய பிரபல தயாரிப்பாளர்!
தீபாவளி ஸ்பெஷலாக திரையில் வெளியான இரண்டு படங்கள் தான் பிகில், கைதி. அதில் பிகில் படம் நடிகர் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கியிருந்தார். மேலும் இந்த படம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக உருவாகி இருந்தது.
இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் 250 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. அதேபோல் நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். விஜய் படத்திற்கு போட்டியாக இந்த படமும் வெளியானது.
இந்நிலையில் தற்போது பிரபல தயாரிப்பாளரான கே. ராஜன் அவர்கள் கைதி படம் குறித்து அதிரடியாக பேசியுள்ளார். ஒரு நாள் இரவில் மட்டுமே எடுக்கப்பட்ட படம், செட் ஏதும் இல்லை, பாடல்கள் கிடையாது, ஹுரோயின் இன்றி குறைந்த பட்ஜெட்டில் அருமையாக படத்தை இயக்கிய இயக்குனருக்கு எனது வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.
மேலும் கோடி கோடியாய் செலவழித்த படங்கள் தான் ஓட வேண்டும் என்பதில்லை. குறைந்த பட்ஜெட்டில் வரும் நல்ல படங்களையும் மக்கள் ஆதரிப்பார்கள் என கூறியுள்ளார்.