மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
2015 சமூக சேவை கார்த்திக், 2023ல் எங்கே போனார்? - திரைப்பட விமர்சகர் புளூசட்டை மாறன் கேள்வி.!
கடந்த டிசம்பர் 03 மற்றும் 04ம் தேதிகளில் சென்னையை புரட்டியெடுத்த மிக்ஜாங் புயலின் தாக்கத்தால், சென்னை நகரமே மீண்டும் 2015 போல வெள்ளத்தில் மூழ்கியது.
பல இடங்களில் நீர் தேங்கி மக்கள் அவதிப்பட்ட நிலையில், அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். தற்போது நகரம் தனது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. எஞ்சிய பகுதிகளில் தேங்கியுள்ள நீரும் வெளியியேற்றப்பட்டு வருகிறது.
கடந்த 2015ம் ஆண்டும் ஏற்பட்ட புயலின் தாக்கத்தால், சென்னை நகரமே சீர்குலைந்து. அன்று ஆளும் அரசுக்கு எதிராக குரல் கொடுத்த பல திரையுலக பிரபலங்களும், இன்று எதுவும் பேசாமல் இருந்து வருவதாக சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் எழுகின்றன.
நடிகர்கள் கார்த்திக் மற்றும் சூர்யா பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்ய தங்களின் ரசிகர் மன்றத்திற்கு ரூ.10 இலட்சம் நிதிஉதவி அளித்து மக்களுக்கு நலத்திட்ட பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினர். இதுதொடர்பான செய்திகளும் வெளியாகின. ஆனால், இவர்கள் களத்திற்கு வரவில்லை.
கடந்த 2015 வெள்ளத்தின்போது நடிகர் கார்த்திக் வெள்ளம் சீரமைப்பு பணிகளுக்கு அரசு வரும் என எதிர்பார்க்க வேண்டாம். இளைஞர்களான நாமே, நாம் வசிக்கும் பகுதிக்கு பொறுப்பெடுத்து மீட்பு பணிகளை மேற்கொள்வோம் என பேட்டி அளித்து இருந்தார்.
தற்போது இந்த விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள புளூசட்டை மாறன், 2015 வெள்ளத்திற்கு வந்த நடிகர் கார்த்திக், 2023 வெள்ளத்தின்போது எங்கே என கேள்வி எழுப்பும் வகையில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவுகள் வைரலாகி வருகின்றன.
2015 சென்னை வெள்ளம்:
— Blue Sattai Maran (@tamiltalkies) December 11, 2023
சமூக சேவையில் கார்த்தி.
2023...? pic.twitter.com/J62XNP9IXU