ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
3 மாதத்துக்குள் ஓய்வு.. சமூக அறிவியல் ஆசிரியரின் ஆபாச பேச்சால் வழக்கில் சிக்கித் தவிப்பு.!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நான்குமுனை சந்திப்பு பகுதியில், அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம், சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
இந்த பள்ளியில் சமூக அறிவியல் பாட ஆசிரியராக இருப்பவர் அன்பழகன் (வயது 59). இவர் சில மாதங்களில் ஓய்வுபெறவுள்ளார். இதே பள்ளியில் 9ம் வகுப்பு மாணவி பயின்று வருகிறார். அன்பழகன், மாணவியிடம் எப்போதும் இரட்டை அர்த்தத்துடன் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: உளுந்தூர்பேட்டை: காவு வாங்க காத்திருக்கும் மின்சார கம்பிகள்; உயிரிழப்புக்கு முன் நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்? எதிர்பார்ப்பில் மக்கள்.!
அதிகாரிகள் விசாரணை
இந்த விஷயம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே, அவர்கள் கடலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நலத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, விஷயம் வெளியே வந்து, பல மாணவிகளும் முன்வந்து புகார் அளித்தனர். இதன்பேரில் துறை ரீதியான விசாரணை நடைபெற்ற நிலையில், ஆசிரியர் அன்பழகன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். காவல்துறையினரும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: உளுந்தூர்பேட்டை: மழைக்கு மரத்தடியில் ஒதுங்கியதால் சோகம்; இருவர் மின்னல் தாக்கி பலி.!