மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூர்யாவின் 'கங்குவா' படத்தில் அனிமல் பட வில்லன்.. மிரட்டலான போஸ்டர் வெளியீடு!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போதைய இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற வரலாற்று பின்னணியில் உருவாகும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த ஆண்டு கோடையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன், பாலிவுட் நடிகை திஷா பதானி, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதிபாபு, இளவரசு, நட்டி நடராஜ், யோகி பாபு மற்றும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர்.
இதனிடையே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இந்தப் படம் சுமார் 350 கோடி ரூபாய் செலவில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. அதன்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 10 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் பாபி தியோலின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தில் அவர் நடித்துள்ள கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.