மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனா லாக்டவுனில், இரு கிராமங்களை தத்தெடுத்த பிரபல நடிகை! குவியும் வாழ்த்துக்கள்!
நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் தங்களது வேலைகளை இழந்து வருமானமின்றி சாப்பாட்டிற்கே வழியில்லாமல் பெருமளவில் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், தனது பிறந்த நாளை முன்னிட்டு இலங்கையை சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மராட்டியத்தில் உள்ள பதார்தி, சக்கூர் ஆகிய 2 கிராமங்களை தத்தெடுத்திருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் அங்கு வசிக்கும் மக்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்குதல், வேலை வாய்ப்பு பயிற்சி, சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல பணிகளை மேற்கொள்ளவுள்ளார்.
ஜாக்குலின் பெர்னாண்டஸ் அமிதாப் பச்சன், சஞ்சய் தத் நடித்த அலாதீன் என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர், பிரபாஸ் நடித்து தெலுங்கு, தமிழ், இந்தியில் உருவான சாஹோ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். மேலும் தற்போது அட்டாக் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் கிராமங்களை தத்து எடுத்தது குறித்து ஜாக்குலின் கூறுகையில், இந்த கஷ்டமான காலத்தில் பலரும் அடிப்படை தேவைகளுக்காக போராடுகின்றனர். இந்நிலையில் அப்படிப்பட்ட மக்களுக்கு தம்மால் இயன்ற ஏதாவது உதவிகள் செய்ய வேண்டுமென்ற நோக்கிலேயே இரண்டு கிராமங்களை தத்தெடுத்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.