திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"நீ எல்லாம் ஒரு ஹீரோவா.?.." அவமானப்படுத்திய பாலிவுட்.!! ஒருமை காத்த கேப்டன்.!! குஷ்பூ பகிர்ந்த ஷாக்கிங் நியூஸ்.!!
தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். இவர் கடந்த டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். கேப்டன் சினிமாவில் மட்டுமல்ல தனது நிஜ வாழ்க்கையிலும் பலருக்கும் உதவி புரிந்தவர். மேலும் நடிகர் சங்க தலைவராக இருந்த காலகட்டத்தில் நடிகர் சங்கத்திற்காக பல கலை நிகழ்ச்சிகளை நடத்தி நடிகர் சங்கத்தின் கடனை அடைத்தவர். இந்நிலையில் விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது கேப்டனுக்கு ஏற்பட்ட அவமானத்தை நடிகை குஷ்பூ தற்போது பகிர்ந்துள்ளார்.
நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த் கேப்டன் விஜயகாந்த்
நடிகர் சங்க தலைவராக இருந்தபோது நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்காக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் , நடிகைகள் உட்பட அனைவரையும் ஒருங்கிணைத்து மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தினார். இதன் மூலம் கிடைத்த வருமானத்தை கொண்டு நடிகர் சங்கத்தின் கடனை அடைத்ததோடு நடிகர் சங்கத்தின் கணக்கில் 2 கோடி ரூபாய் வரவும் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை குஷ்பூ பகிர்ந்த அதிர்ச்சி தகவல்
இந்நிலையில் விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது நடந்த அதிர்ச்சியான சம்பவம் ஒன்றை தற்போது குஷ்பூ பகிர்ந்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் நடிகர் சங்கத்திற்கு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. மும்பையைச் சேர்ந்த சிலர் கோடம்பாக்கத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தனர். அவர்களை சந்தித்து பேசுவதற்காக நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் மற்றும் நடிகர் சங்க பதவியில் இருந்த குஷ்பூவும் சென்றுள்ளனர். அப்போது நடைபெற்ற சம்பவங்கள் தன்னை மிகவும் அதிர்ச்சி அடையச் செய்ததாக குஷ்பூ தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: இளம் வில்லன் நடிகருடன் கைகோர்க்கும் அதிதி ஷங்கர்.! வைரலாகும் புகைப்படம்.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
அவமானப்படுத்தப்பட்ட கேப்டன் விஜயகாந்த்
இந்தி திரை உலகில் இருந்து வந்தவர்களை சந்திக்க ஹோட்டலுக்குசென்றபோது கேப்டன் விஜயகாந்திற்கு உட்கார நாற்காலி கூட கொடுக்காமல் அவமானப்படுத்தி இருக்கிறார்கள் என குஷ்பூ தெரிவித்துள்ளார். மேலும் விஜயகாந்தை பார்த்து இவரெல்லாம் ஒரு ஹீரோவா.? என ஹிந்தியில் பேசியதாக குஷ்பூ குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ஹிந்தி திரைத்துறையைச் சார்ந்தவர்களிடம் தான் சண்டையிட சென்றபோது நாம் நடிகர் சங்கத்தின் பிரச்சனைக்காக வந்திருக்கிறோம் அதனால் பொறுமையாக இரு என விஜயகாந்த் தனக்கு அறிவுரை கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: என்னது..பிரேமம் படத்தில் முதலில் மலர் டீச்சராக நடிக்கவிருந்தது இந்த முன்னணி நடிகையா?? இயக்குனர் வெளியிட்ட தகவல்!!