திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அயோத்தி ராமரை தரிசித்த நடிகர் அமிதாப் பச்சன்; அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் அமிதாப் பச்சன். இவருக்கு உலகளவில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் என்று கூறலாம். இறைபக்தியில் ஈடுபாடு கொண்ட நடிகர் அமிதாப் பச்சன், சமீபத்தில் அயோத்தியில் திறக்கப்பட்ட இராமர் கோவிலுக்கு நேரில் சென்று வழிபாடு நடத்தி இருந்தார்.
இந்நிலையில், இவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் இன்று அயோத்தி ஸ்ரீ இராமரை தரிசனம் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
T 4916 - जय श्री राम 🚩
— Amitabh Bachchan (@SrBachchan) February 10, 2024
आस्था ने फिर बुलाया, और खींचे चले गये हम pic.twitter.com/FoqCdG5zIb
ரூ.1800 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் ஸ்ரீ ராமர் கோவில், பிரதமர் மோடியால் கும்பாவிஷேக பணிகள் நிறைவுபெற்றதை தொடர்ந்து மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.
அயோத்தி நகரின் சுற்றுலா பெருகவும், ஆன்மீக நகரமாக அதனை அங்கீகரிக்கவும் அம்மாநில அரசு மத்திய அரசுடன் இணைந்து அயோத்தி நகரில் புதிய சர்வதேச விமான நிலையம், நவீனமயமான இரயில் நிலையம் ஆகியவற்றை அமைத்துள்ளது.