#Breaking: தமிழ்த் திரைப்பட நடிகர் & கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி புற்றுநோயால் காலமானார்...!
ஜெயலலிதா வாழ்க்கை தொடரில்,ஜெயலலிதா மற்றும் சசிகலாவாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

தனது திரையுலக பயணத்தின் மூலம் தமிழக மக்களிடம் அறிமுகமாகி, அரசியலில் பல்வேறு இன்னல்களை சந்தித்து தமிழகத்தின் முதல்வராக திகழ்ந்த இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தற்பொழுது திரைப்படம் தயாராகி வருகிறது.
தமிழக முதல்வராகவும், இரும்பு பெண்ணாகவும் திகழ்ந்த ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க பாரதிராஜா, பிரியதர்ஷினி , லிங்குசாமி மற்றும் ஏ.எல் விஜய் உள்ளிட்ட பல இயக்குனர்கள் தீவிரமாக உள்ளனர்.
இந்நிலையில் இயக்குனர் கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கையை இணைய தொடராக இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.
அதனை தொடர்ந்து சசிகலாவாக நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், சர்ச்சையான கதாபாத்திரத்தால் இந்த வேடத்தில் நடிக்க பல நடிகைகளும் தயங்கினர்.இந்நிலையில் இந்த தொடரில் சசிகலாவாக விஜி சந்திரசேகர் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இதில் வம்சி கிருஷ்ணா சோபன் பாபுவாகவும், இந்திரஜித் எம்.ஜி.ஆராகவும் நடிக்கின்றனர்.