நலிந்த கலைஞர்களின் கோரிக்கைகளுக்கு உதவ மறுக்கும் நடிகர் சங்கம்? - லொள்ளு சபா மனோகர் கண்ணீருடன் வேதனை.!



Comedy Actor Lollu Sabha Manokar on Film Actors Union 

சென்னையில் உள்ள நடிகர் சங்க அலுவலகத்தில், இன்று நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பாலியல் தொல்லை தொடர்பான குற்றச்சாட்டில் சிக்கும் நடிகர்களை, 5 ஆண்டுகள் படத்தில் நடிக்க தடை விதித்து உத்தரவிடவேண்டும் என்ற பரிந்துரையை நிறைவேற்றி, தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். பல முக்கிய முடிவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. 

நலிந்த கலைஞர்களுக்கு உதவுங்கள்

இதனிடையே, கூட்டத்தில் கலந்துகொள்ள ஆட்டோவில் வந்து இறங்கிய பிரபல காமெடி நடிகர் லொள்ளு சபா மனோகர், "நலிந்த கலைஞர்களை சேர்ப்போம் என கூறியுள்ளனர். அந்த பட்டியலில் என்னையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். எனது வீட்டில் இருந்து சங்கம் 12 கி.மீ தூரத்தில் உள்ளது. என்னை நலிந்த கலைஞர்கள் பட்டியலில் சேர்த்தால், நாங்கள் அங்கு நடந்து வந்துவிடுவோம். இங்கு உணவு கிடைக்கும். ஏனெனில் நாங்கள் அனாதையாகிவிடுவோம். நாங்கள் அடைகாலத்திற்காக நடிகர் சங்கத்தை தேடி வந்துள்ளோம். 

இதையும் படிங்க: விநாயகரை அஜித் கொண்டாடிய அளவிற்கு ஏன் விஜய் கொண்டாடவில்லை? - புளூசட்டை மாறன் கேள்வி.!

ரூ.10 இலட்சம் ஏமாற்றிய நபர்

எங்களுக்கு என சில நண்பர்கள் இருப்பார்கள். அவர்களை சந்தித்து மகிழ்வோம். எங்களுக்கு வேலை இல்லாத நாட்களில், எங்களின் நிலைமை இதுவே. எங்களுக்கு வாழ்க்கையின் இன்னல்கள் குறித்து கவலை இருக்காது. நீங்கள் கேட்கும்போது கூறுகிறேன். நான் சில விஷயங்கள் குறித்து அவர்களிடம் முறையிடும்போது அவை நடைபெறாமல் இருக்கிறது. எனக்கு தயாரிப்பாளர் ஒருவர் ரூ.10 இலட்சம் தரவேண்டும். அதனை நடிகர் சங்கத்திடம் கூறியும் பலன் இல்லை. 

நீதிமன்றத்திக்கு சென்றும் பலனில்லை. வடபழனிக்கும் - வீட்டிற்கும் நான் வந்துசெல்கிறேன். என்னை ஏமாற்றியவர் நல்ல மோட்டார் சைக்கிளில் பந்தோபஸ்தாக சுற்றுகிறார். நலிந்த கலைஞர்கள் விஷயத்தில் நடிகர் சங்கம் உதவினால், பல்வேறு பிரச்சனைகள் முடிவுக்கு வரும்" என கூறினார்.

இதையும் படிங்க: விஜயகாந்தின் ராஜதுரை திரைப்பட கதைதான் கோட்? - வெங்கட் பிரபுவை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!