மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பராக்... வெளியானது டி50 போஸ்டர் மிரண்டு போன ரசிகர்கள்... டி50 மாஸ் அப்டேட்.!
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகராக இருப்பவர் தனுஷ். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இவர் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறைவடைந்தது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தென்காசி கடலூர் மற்றும் மதுரை சுற்றுவட்டாரங்களில் நடைபெற்று முடிந்தது.
இதனைத் தொடர்ந்து திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து விட்டு மொட்டை போட்டிருக்கிறார் நடிகர் தனுஷ். அதோடு தனது ஐம்பதாவது திரைப்படத்திற்கான வேலைகளையும் தொடங்கி விட்டார். தனுஷ் நடிக்க இருக்கும் 50ஆவது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தத் திரைப்படத்தை தனுஷே இயக்க இருக்கிறார்.
இத்திரைப்படத்தில் தனுஷூடன் எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.
#D50 #DD2 Shoot begins @sunpictures Om Namashivaya pic.twitter.com/DP1g3rO1y5
— Dhanush (@dhanushkraja) July 5, 2023
வடசென்னை மையமாகக் கொண்டு நடைபெறும் கேங்ஸ்டர் கதையாக தனுஷின் ஐம்பதாவது திரைப்படம் உருவாக இருக்கிறது. இதற்கான போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. ரத்தம் சொட்ட சொட்ட வெளியான போஸ்டரை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் இருக்கிறார்கள்.