#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நயன்தாராகிட்ட இருக்கும் கெட்டப்பழக்கம் இதுதான்! ரகசியத்தை அம்பலப்படுத்திய தொகுப்பாளினி டிடி!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த 20 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. இவரது கலகலப்பான பேச்சிற்கும், நடவடிக்கைகளுக்குமென ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது.
மேலும் அவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பல பிரபலங்களையும் சந்தித்து பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து சினிமாவிற்கு தாவிய நபர் டிடி பவர் பாண்டி, சர்வதாள மயம் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார். டிடி பல நடிகர், நடிகைகளுக்கும் நல்ல தோழியாக இருப்பவர்.
இந்நிலையில் டிடி சமீபத்தில் ரசிகர்களுடன் நேரடி உரையாடல் செய்துள்ளார். அப்பொழுது அவரிடம் ரசிகர் ஒருவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா குறித்து பேசியுள்ளார். இந்நிலையில் டிடி நயன்தாராவிற்கு கெட்ட பழக்கம் ஒன்று உள்ளது.
நயன்தாராவிற்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் மனதிற்குள் வைத்துக்கொண்டு, போலியாக வெளியே பேசமாட்டார். அவர்களுக்கு போன் செய்து நீங்கள் செய்தது எனக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் நான் உங்களிடம் பேசவில்லை என மிகவும் ஓப்பனாக பேசிவிடுவார். மேலும் இது மற்றவர்களிடம் இல்லாத நல்ல பழக்கம்கூட என டிடி புகழ்ந்து பேசியுள்ளார்.