மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் ஓடிடி ரிலீஸ் எப்போது? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர் தனுஷ். தற்போது இவர் தனது 50வது திரைப்படத்தை இயக்கி, நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் மூன்றாவதாக ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை அவரே தயாரிக்க உள்ளார்.
இதனிடையே கடந்த பொங்கல் பண்டிகை முன்னிட்டு தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.
மேலும், இந்த திரைப்படத்தில் தனுஷுடன் நடிகை பிரியங்கா அருள் மோகன், கன்னட நடிகர் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், விநாயகன், அதிதி பாலன், நாசர், ஜான் கொக்கன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர்.
what makes a soldier go rogue? the answer lies in Miller’s journey#CaptainMillerOnPrime, Feb 9 @dhanushkraja @priyankaamohan @ArunMatheswaran @gvprakash @NimmaShivanna @sundeepkishan @SathyaJyothi pic.twitter.com/EknEyYNW7O
— prime video IN (@PrimeVideoIN) February 2, 2024
இந்த நிலையில் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வரும் பிப்ரவரி 9 தேதி ரிலீஸாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.