தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
பெரும் சவாலாக அமைந்த அந்த 3 ரன்! வாய்ப்பை தவறவிட்ட கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் வீரர்!
ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 43 போட்டிகள் இதுவரை முடிவுபெற்றுள நிலையில் சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இட்டதிலும், டெல்லி, மும்பை, கைதராபாத் அணிகள் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் இட்டதிலும் உள்ளது.
நேற்று நடந்த கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் இடையே நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணி கடைசி ஓவரில் வெற்றிபெற்றது. முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 175 ரன் எடுத்தது. அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி 97 ரன் எடுத்தார். 179 ஐபில் போட்டிகள் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் அடித்த அதிகபட்ச எண்ணிக்கை.
இன்னும் 3 ஓட்டங்கள் எடுத்திருந்தால் 12 வருடம் கழித்து 100 ஓட்டங்கள் பெற்றிருப்பார் தினேஷ் கார்த்திக். ஆனால் 3 ரன்னில் அந்த வாய்ப்பு தவறிவிட்டது. அதேபோல ராஜஸ்தான் அணி வீரர் ரியான் பராக் நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 47 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இன்னும் 3 ஓட்டங்கள் எடுத்திருந்தால் குறைந்த வயதில் 50 ரன் எடுத்த ஐபில் வீரர் என்ற பெருமை ரியான் பராக்கிற்கு சென்றிருக்கும். ஆனால் 3 ஓட்டங்களில் அந்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டார் ரியான் பராக்.