#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வேட்டையாடு விளையாடு படத்தில் நடிக்க மறுத்த கமல். இனி கமலுடன் நானும் நடிக்க மாட்டேன் கௌதம் மேனன் பரபரப்பு பேட்டி.?
தமிழ் திரையுலகில் குழந்தையிலிருந்து இப்போது வரை இவரின் நடிப்பினால் பலரையும் ரசிகராக மாற்றிவிடும் திறமை நடிகர் கமலஹாசனுக்கு உண்டு. சினிமா துறையிலேயே கமலஹாசனுக்கு பலரும் ரசிகராக இருக்கின்றனர்.
இதன்படி, கௌதம் வாசுதேவ் மேனனும் கமலின் தீவிர ரசிகராவர். அந்த காலகட்டத்தில் கமலை வைத்து படம் இயக்க கௌதம் வாசுதேவ் மேனன் ஆசைப்பட்டிருக்கிறார். அதன்படி கமலிடம் 'வேட்டையாடு விளையாடு' கதையை கூறியிருக்கிறார். ஆனால் கமல் 'தசாவதாரம்' படத்தின் கதையை கூறி இப்படத்தை எடுக்கலாம் என்று சொல்லி இருக்கிறார். இவ்வாறு ஒரு பேட்டியில் கௌதம் வாசுதேவ் மேனன் கூறினார்.
ஆனால் கமலின் பத்து வேடங்களில் நடிக்கும் 'தசாவதாரம்' படத்தை இயக்க கௌதம் வாசுதேவ் மேனன் தயக்கம் காட்டியதால் 'வேட்டையாடு விளையாடு' படமே உருவாகியது. ஆனால் கமலுக்கு இப்படத்தில் நடிக்க விருப்பம் இல்லாமல் நடித்து முடித்துவிட்டு படம் திரையரங்கில் வெளியான பிறகு அதனை பார்த்த கமலஹாசன் கௌதம் வாசுதேவன் மேனனை பாராட்டி இருக்கிறார்.
மேலும், அந்த பேட்டியில் நான் கமலுடன் இணைந்து நடிக்க மாட்டேன். அவர் நடிப்பிற்கு ஈடு கொடுத்து என்னால் நடிக்க முடியாது. கமல் ஒரு சிறந்த நடிகர் என்று அவரை பாராட்டி மரியாதையுடன் கௌதம் வாசுதேவ் மேனன் கூறியிருக்கிறார்.