மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லோகேஷ் கனகராஜின் தக் லைப் மொமண்ட் ... ஓவர் ரேட்டட் இயக்குநர் என்று கலாய்த்த நெட்டிசன்கள்.!?
தமிழ் திரைப்பட இயக்குனரான லோகேஷ் கனகராஜ் முதன் முதலில் 2017 ஆம் ஆண்டு 'மாநகரம்' திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படத்திற்குப் பின் நீண்ட இடைவேளைக்குப் பிறகு கார்த்தியின் நடிப்பில் 'கைதி' திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் வணிக ரீதியில் வெற்றியைப் பெற்றது. இந்த படமே லோகேஷின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் 2020 ஆம் வருடம் விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வெற்றி பெற்றது. இதையடுத்து கமலஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தின் வெற்றியை படக்குழுவினர் சமீபத்தில் கொண்டாடினர். இவ்வாறாக கோலிவுட்டில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
தற்போது மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் விஜயின் 67வது படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அங்கு நடைபெறும் நிகழ்வுகளை படக்குழுவினர் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் அனிருத் வெளியிட்ட புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவியது.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். அதில் ரசிகர் ஒருவர் நீங்கள் 'ஓவர் ரேட்டட் இயக்குநர்' என்று பதிவு செய்திருந்தார். அப்பதிவிற்கு லோகேஷ் லைக் செய்திருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் லோகேஷ் கனகராஜுக்கு சப்போர்ட் செய்து பாசிட்டிவாக கமெண்ட் செய்து வருகின்றனர்.