பீஸ்ட்டா? கே.ஜி.எப்.பா?.. இதெல்லாம் ரொம்ப தப்புங்க - இயக்குனர் பேரரசு காட்டம்.!



Director Perarasu Speech about KGF Chapter 2 Beast

ஒரு சில படம் தோல்வியடைந்ததை வைத்து, தெலுங்கு/கன்னட படங்கள் ஒருசில வெற்றியடைந்ததை வைத்து தமிழ் படங்களை வேறுபடுத்தி பேசக்கூடாது. இசைஞானி இளையராஜாவின் கருத்து அவரின் தனிப்பட்டது என்று இயக்குனர் பேரரசு பேட்டியளித்தார்.

இயக்குனர் பேரரசு செய்தியாளர்களை சந்திக்கையில், "பீஸ்ட் நன்றாக உள்ளதா? கே.ஜி.எப் நன்றாக உள்ளதா? என்பதை மொழியை வைத்து தேர்வு செய்ய கூடாது. தலைப்பை வைத்து மட்டும் தான் விவாதம் செய்ய வேண்டும். நாமே தமிழ் படம் நன்றாக இல்லை என்று கூறினால், மல்லாக்க படுத்து நாமே எச்சிலை மாறி உமிழ்வதற்கு சமம்.

தமிழ் படம் என்றுமே சிறந்த தரத்தில் தான் இருக்கும். தெலுங்கு, கன்னட படங்கள் அதிகம் தமிழ் திரையுலகில் சந்தித்துள்ளது. ஒரு கன்னட படம் பார்த்தல் 5 தமிழ் படங்களை பார்க்கலாம். 5 படங்களின் கலவையாக அது இருக்கும். சில அனுபவம் இல்லாத இயக்குனர்கள் பெரிய வாய்ப்பு கிடைக்கும் போது அவர்களால் சரியாக பணியாற்ற இயலவில்லை என்று நினைக்கிறன். 

Director Perarasu

ஒரு சில படம் தோல்வியடைந்ததை வைத்து, தெலுங்கு/கன்னட படங்கள் ஒருசில வெற்றியடைந்ததை வைத்து தமிழ் படங்களை வேறுபடுத்தி பேசக்கூடாது. மொழியை வைத்து வேறுபடுத்தி பார்க்க கூடாது. என்றும் தமிழ்ப்படம் தமிழ்ப்படம் தான். ஒரு இயக்குனருக்கு அனைத்து படமும் பெரிய வெற்றி என்று என்ன கூடாது. சில சூழ்நிலையால் சரிவுகள் இருக்கலாம். தோனி போலத்தான் அனைத்துமே. 

ஒரு மேட்சில் 4 பாலில் அவுட்டானால், அடுத்த மேட்சில் வெற்றி திருப்பம் தான். முழுமையாக இயக்குனரின் மீது எந்த பழியையும் சுமத்த இயலாது. விஜய்க்காக கதை 3 என்னிடம் உள்ளது. அவர் தேதி கொடுத்தால் பேசலாம். அதனைப்போல இன்று அவரின் நிலைமை வேறு. அவர் வாய்ப்பு கொடுத்தால் திறமையை நிரூபணம் செய்வேன். இசைஞானி இளையராஜாவின் கருத்து அவரின் தனிப்பட்டது. அவரை விமர்சிப்பது தவறானது. தமிழ் சமூகம் இன்றளவில் தவறான அணுகுமுறையை சந்திக்கிறது" என்று தெரிவித்தார்.