#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது விஸ்வாசம் இயக்குனர் சிவாவா? வெளியான தகவல்கள்!
விஜய் தற்போது தளபதி 63 படத்தில் பிசியாக நடித்துவருகிறார். அட்லீ இந்த படத்தை இயக்கிவருகிறார். தாப்தி 63 படம் முடிந்தபின்னர் விஜய் சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும், அதற்காக பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக விசுவாசம் பதில் அஜித்தை இயக்கினார் சிவா. வீரம், வேதாளம் இரண்டும் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் விவேகம் படம் தோல்வியை தழுவியது.
தற்போது மீண்டும் விஸ்வாசம் படம் மூலம் மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்து பிரபலமாகிவிட்டார் இயக்குனர் சிவா. இந்நிலையில் தளபதி 64 படத்தை சிவா இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
எற்கனவே சத்யஜோதி பில்ம்ஸ்க்கு விஜய் ஒரு படம் நடித்த தருவதாக இருந்தது. தற்போது அந்த படத்தை சிவாவை வைத்து விஜய்யை இயக்க முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை.