#Breaking: தமிழ்த் திரைப்பட நடிகர் & கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி புற்றுநோயால் காலமானார்...!
கலைஞர் எழுதிய மிக சிறந்த வசனம் எது தெரியுமா? அரங்கம் அதிர்ந்து, அனைவரும் கண்ணீரில் மூழ்கிய தருணம் அது.

கலைஞர் பகுத்தறிவுவாதி. கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி தான். அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லையே ஒழிய, மற்றவர்களின் நம்பிக்கையைில் தலையிட மாட்டார்.
ஆனால், அவர் ஆன்மீகத்தைப் பற்றி அறியாதவர் என்று யாரும் நினைத்தால், அது தான் தவறு. பகவத் கீதை, குர் ஆன், பைபிள் போன்ற ஆன்மீக நுால்களைக் கரைத்துக் குடித்தவர்.
அதனைப் பற்றி விவாதம் செய்யும் அளவிற்கு, அந்த அனைத்து ஆன்மீக நுால்களிலும் தேர்ச்சி பெற்றவர்.
அவர் கதை வசனம் எழுதிய, பராசக்தி படத்தில், சிவாஜியின் தங்கையாக வரும் கல்யாணி, திருமணம் முடிந்து, குழந்தை பிறந்ததும், தன் கணவனை விபத்து ஒன்றில் பறி கொடுக்கிறாள்.
அண்ணன்மார்கள், மூவரும் ரங்கூனில் இருக்க, தன் வயிற்றுப் பாட்டிற்காக, பல இடங்களில் வேலை செய்கிறாள், கல்யாணி. கோயில் பூசாரி முதற் கொண்டு, எல்லோரும், அவள் இளமையைத் தான், ஆதரி்க்க விரும்பினார்களே ஒழிய, அவளது வறுமையைப் போக்க யாரும் முன் வரவில்லை.
எனவே. வறுமை தாங்க முடியாமல், தன் குழந்தையை ஆற்றில் போடுவதற்கு முன்பாக, கல்யாணி கொஞ்சுவாள்.
“என் கண்ணில் வழியும் கண்ணீர் கூட, தாய்ப்பாலாக மாறினால், உன் பசி போக்கி இருப்பேனே”,? என்று கதறிய படி, மனதைக் கல்லாக்கிக் கொண்டு, குழந்தையை ஆற்றில் போட்டு விடுகிறாள்.
அவளைக் கைது செய்த காவல் துறையினர், அவளை நீதி மன்றத்தில் ஒப்படைக்கின்றனர். அப்போது நீதிபதி கேட்கிறார்.
“உன் குழந்தையை நீ கொன்றது குற்றம். அதை நீ காப்பாற்றி இருக்க வேண்டும்” என்பார்.
அதற்கு கல்யாணி, “என் குழந்தை என்ன திருஞானசம்பந்தரா? பார்வதி வந்து பால் கொடுத்து காப்பாற்ற…..? என்பார்.
கலைஞரின் இந்த வசனம் வரும் காட்சியில், ரசிகர்களின் கை தட்டலினால், அரங்கமே அதிர்ந்தது!