மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மத்த எந்த சீரியலிலும் இல்லாதது இதில் இருக்கு... எதிர்நீச்சல் சீரியல் சீக்ரெட்டை உடைத்த ஜனனி.!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வரும் சீரியல் எதிர்நீச்சல். தற்போது டிஆர்பியில் முன்னணி வகிக்கும் இந்த தொடரில் நடிகர் மாரிமுத்து, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா, சத்ய பிரியா, பாம்பே ஞானம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கோலங்கள் சீரியலை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் திருச்செல்வம் இந்த தொடரை இயக்கி வருகிறார்.
எதிர்நீச்சல் தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ஜனனியாக நடித்து வரும் நடிகை மதுமிதா அண்மையில் பேட்டி ஒன்றில் தொடர் குறித்தும், அதில் நடிப்பவர்கள் குறித்தும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் கூறியதாவது, மற்ற சீரியலுக்கும் எதிர்நீச்சல் சீரியலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. நான் முன்பு நடித்த பல சீரியல்களில் என்னை நிறைய ஓவர் ஆக்டிங் செய்ய சொல்வார்கள். ஆனால் இந்த தொடரில் மிகவும் கேஷுவலாக, இயற்கையாகவே நடித்து வருகிறேன். தொடரில் நடிக்கும் போது இயக்குனர் திருச்செல்வம், இந்த கேரக்டரை நீங்களா நினைத்துகொண்டு, எப்படி ரியாக்ட் செய்வீங்களோ அதுமாதிரியே பண்ணுங்க போதும்னு சொல்லிட்டாரு.
அதுமட்டுமல்லாமல் மற்ற சீரியல்களில் வருவதுபோல ஹீரோயின் மற்றும் நெகட்டிவ் ரோலில் வருபவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், இந்த சீரியலில் நடிக்கும் அனைவரின் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் உள்ளது. எல்லாரையும் விட மாரிமுத்து சார் ரொம்ப ஃபேமஸ் ஆகிவிட்டார் என கூறியுள்ளார்.