#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆத்தாடி! இப்படியொரு ரசிகையா? இலங்கை சென்ற டிடிக்கு காத்திருந்த இன்பஅதிர்ச்சி! வைரலாகும் வீடியோ!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த 20 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றுபவர் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. இவரது கலகலப்பான பேச்சிற்கும், நடவடிக்கைகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது.
மேலும் அவர் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பல பிரபலங்களையும் சந்தித்து பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து டிடி பவர் பாண்டி, சர்வதாள மயம் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார்.
மேலும் டிடி தற்போது விஜய் தொலைக்காட்சியில் speed நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் டிடி இலங்கை சென்றபோது ரசிகை ஒருவர் அவரை பார்த்ததும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.இதனை டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விலைமதிப்பற்ற உணர்வு என வெளியிட்டுள்ளார்.