மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கவுண்டமணி காசுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்" கங்கை அமரனின் சர்ச்சையான பேட்டி.?
கோலிவுட் திரையுலகில் பிரபல காமெடி நடிகராக இருந்தவர் கவுண்டமணி. கவுண்டமணி, செந்தில் காமெடி இருப்பதனாலையே 80ஸ் காலகட்டத்தில் நிறைய படங்கள் ஹிட்டாகி உள்ளது. தற்போது கவுண்டமணி பற்றி கங்கை அமரன் பேட்டி ஒன்றில் சர்ச்சையான கருத்தை கூறியிருக்கிறார்.
மேடை நாடகங்கள் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கவுண்டமணி. காமெடி கிங்காக இருக்கும் கவுண்டமணி வில்லன், ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கிக் கொண்டிருந்தார்.
கவுண்டமணியின் காமெடி 80ஸ் ரசிகர்களை கவர்ந்து திரைப்படங்கள் வெற்றி பெறும். இதனாலேயே தயாரிப்பாளர்கள் கவுண்டமணி கட்டாயமாக நடிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து வந்தனர்.
இது போன்ற நிலையில் 'கரகாட்டம்' படத்தில் காமெடி நடிகராக நடித்திருக்கும் கவுண்டமணியை இப்படத்தில் ஒப்பந்தம் செய்தது கங்கை அமரன் தான். இவ்வாறு இருக்க அப்படத்தின் தயாரிப்பாளருக்கு பணம் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கவுண்டமணிக்கு நடித்ததற்கான சம்பளம் கிடைக்காமல் போய்விடும் என்று நினைத்து இப்போதே சம்பளம் கொடுத்தால் தான் டப்பிங் பேச வருவேன் என்று கறாராக பேசியுள்ளார். இதனால் மனம் வருத்தமடைந்த கங்கை அமரன் முழு சம்பளத்தையும் கொடுத்து டப்பிங் பேசி படத்தை முடித்திருக்கிறார். இவராக பேட்டி ஒன்றில் கங்கை அமரன் பணத்திற்காக கவுண்டமணி என்ன வேணாலும் செய்வார் என்று கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.