ஜெயலலிதாவின் இடத்தை பிடிக்கும் பிரபல நடிகை; யார் அந்த நடிகை தெரியுமா?
விஜய் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதா ’பயோபிக்’கிற்கு 'தலைவி' என்று பெயரிட்டுள்ளது. இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க நடிகை கங்கனா ரனாவத் ஒப்பந்தமாகியுள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதிமுக கட்சிக்கு பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்தவர் ஜெயலலிதா. அவரது மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கான முயற்சி பட்டியலில் இயக்குநர் பாரதிராஜா, விஜய் மற்றும் ப்ரியதர்ஷினி ஆகியோர் இருந்தனர்.
கடந்த (பிப்.24) ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் இயக்கவுள்ள ஜெயலலிதாவின் பயோபிக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. 'தலைவி' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கு 'பாகுபலி' கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் இணை கதாசிரியராக பணிபுரியவுள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.
மதன் கார்க்கி பாடல்கள் எழுத, விப்ரி மீடியா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. இதற்காக கடந்த 9 மாதங்களாக முதற்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறது படக்குழு. ஜெயலலிதா பயோபிக்கிற்காக, அவரது அண்ணன் மகன் தீபக்கிடம் முறையாக தடையில்லா சான்றிதழும் பெற்றுள்ளது படக்குழு.
இந்நிலையில் இந்த படத்தில் கம்பீரமான ஜெயலலிதாவின் வேடத்தில் நடிக்க நடிகை கங்கனா ரனாவத் தேர்வாகியுள்ளார். 2006 ஆண்டு முதல் இந்தி திரைப்படங்களில் தோன்றி வருகிறார். கேங்ஸ்டர் படத்தில் நடித்ததற்காக பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகை விருதை வென்றார். இயக்குனரும் படப்பிடிப்பாளருமான ஜீவா இயக்கிய தாம் தூம் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
After #gangsofwasseypur this will be my venture back into Hindi .. #GV72 #KanganaRanaut will play the lead role in #Thalaivi, the #Jayalalithaabiopic produced by @vibri_media @vishinduri and directed by #Vijay #Vijayendraprasad #NiravShah @gvprakash #HBDKanganaRanaut
— G.V.Prakash Kumar (@gvprakash) March 23, 2019
#KanganaRanaut to play late TN CM and yesteryear Lady Superstar #Jayalalithaa in #Thalaivi. @gvprakash to compose music. Director Vijay to helm the project! pic.twitter.com/HFcC83U9Rv
— Rajasekar (@sekartweets) March 23, 2019