#Breaking: பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கானின் மனைவிக்கு சம்மன் வழங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள்.. காரணம் என்ன?.. அடுத்த செக்?..!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோவை மையமாக வைத்து செயல்பட்டு வந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் துல்சியானி குழுமம்.
இந்த குழுமம் முதலீட்டாளர்கள் மற்றும் வங்கிகளிடம் இருந்து கடன் பெற்று ரூ.30 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மோசடி தொடர்பாக தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்த நிலையில், குழுமத்தில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
அதன்படி, இந்நிறுவனத்தின் விளம்பர தூதரக நடிகர் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் நியமனம் செய்யப்பட்டு இருந்துள்ளார்.
இதனால் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர். இதுதொடர்பாக அவருக்கு இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மனும் வழங்கி இருக்கின்றனர்.
விசாரணைக்கு நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் ரியல் எஸ்டேட் குழுமம் கௌரிக்காக மேற்கொண்ட நிதிபரிவர்த்தனைகள், அவருக்கு வழங்கப்பட்ட ஊதியம் தொடர்பான விபரங்களை கேட்கலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி, ஷாருக்கான் மிகப்பெரிய பிரச்சனையை எதிர்கொண்டு இருந்தார். இந்த நிலையில், மீண்டும் தலைவலி ஏற்படுவது போல, அவரின் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன் வழங்கி இருக்கிறது.