மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. கௌதம் கார்த்திக்- மஞ்சிமா மோகன் திருமண அழைப்பிதழில் இப்படியொரு ஸ்பெஷல் இருக்கா?? தீயாய் பரவும் புகைப்படம்!! குவியும் வாழ்த்துக்கள்!!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக வலம் வருபவர் கெளதம் கார்த்திக். இவர் 80'ஸ் காலகட்டங்களில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து நவரச நாயகனாக வலம் வந்த கார்த்திக்கின் மகன் ஆவார். அவரது கைவசம் தற்போது பத்து தல மற்றும் செல்லப்பிள்ளை போன்ற படங்கள் உள்ளன.
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் மஞ்சிமா மோகன். அவர் தேவராட்டம் என்ற படத்தில் நடித்தபோது அதில் ஹீரோயினாக நடித்த மஞ்சிமா மோகனுடன் காதலில் விழுந்தார். இதுகுறித்த தகவல் பல ஆண்டுகளாக இணையத்தில் பரவி வந்த நிலையில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் அண்மையில் தங்களது காதலை உறுதிப்படுத்தி புகைப்படங்களை வெளியிட்டனர். இந்த நிலையில் அவர்களது திருமண தேதி விரைவில் வெளிவரும் எனவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகனின் திருமண அழைப்பிதழ் புகைப்படம் என ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில் முழுவதும் கையால் எம்பிராய்டரி செய்யப்பட்டு நெசவு செய்யப்பட்ட துணியால் அழகிய வடிவில் திருமண அழைப்பிதழ் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அந்த ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.