மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வயநாடு நிலச்சரிவு பலி விவகாரம்; ரூ.10 இலட்சம் நிதிஉதவி வழங்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா.!
கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 270 க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கின்றனர். இந்திய இராணுவம், விமானப்படை, கப்பற்படை, தன்னார்வலர்கள் என பலரும் அங்கு மண்ணில் புதையுண்ட மக்களை மீட்டு வருகின்றனர். கொத்துக்கொத்தாக சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
அரசு கோரிக்கை
இதனிடையே, பேரிடரால் பாதிக்கப்பட்ட கேரளா மாநில மக்களுக்கு உதவி செய்ய, மாநில முதல்வரின் வங்கிக்கணக்குக்கு மக்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் நிதிஉதவி தந்து உதவலாம் என அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு, அதற்கான வங்கிக்கணக்கு விபரங்களும் அறிவிக்கப்பட்டன.
நடிகை மந்தனா நிதிஉதவி
இந்நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான திரைப்படங்களில் நடித்து வரவேற்பு பெற்ற நடிகை ராஷ்மிகா. இவரின் நடிப்பில் தற்போது புஷ்பா படத்தின் 2ம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது. முன்னதாக நடிகர் விக்ரம் ரூ.20 இலட்சம் நிதிஉதவி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 42 வயதில் இரட்டை குழந்தைகளை ஈன்றெடுத்த தமிழ் சீரியல் நடிகை; குவியும் வாழ்த்துக்கள்.!
இதையும் படிங்க: டிமாண்டி காலனி 2 படத்தின் ட்ரைலர் அறிவிப்பு; பேய் மிரட்டலுக்கு தயாராகுங்கள்.!