மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்தியன் 2 இசை வெளியீடு விழாவில் சலார் 2 அப்டேட் கொடுத்த பாபி சிம்ஹா; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. திரைபிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் என பலரும் நேரில் கலந்துகொண்டு படத்தின் இசை வெளியீடு விழாவை சிறப்பித்து இருந்தனர். அச்சமயம், நடிகர் பாபி சிம்ஹா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.
அவர் பேசுகையில், "உலகநாயகனை பற்றி உலகுக்கே தெரியும். பிரம்மாண்டமாக திரைப்படம் வந்துள்ளது. இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். படத்தை கட்டாயம் திரையரங்கில் வந்து பாருங்கள். ஜூலை 12 திரையரங்கில் காணத்தவறாதீர்கள். தடை உடை, நான் வயலன்ஸ், சலார் 2 ஆகிய படங்களில் அடுத்தடுத்து நான் நடிக்கவுள்ளேன்.
இதையும் படிங்க: இந்தியன் 2 படத்தின் இசை வெளியீடு விழா; மாஸ் உடையுடன் மிரட்டலாக என்ட்ரி கொடுத்த கமல்.! வீடியோ உள்ளே.!
படத்தில் நடித்தது பெருமை
இந்தியன் 2 படத்தில் நான் நடித்துள்ளேன் என்பது பெரிய பெருமை. மிகப்பெரிய படத்தில் நான் ஒரு கதாபாத்திரம் நடித்துள்ளேன் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். இப்படியான வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. எனக்கு கிடைத்துள்ளது பெருமையாக இருக்கிறது. ஷங்கரின் இயக்கத்தில், கமல் சாருடன் நான் நடிப்பேன் என எதிர்பார்க்கவே இல்லை.
கோபத்தால் நான் நிறைய அனுபவம் அடைந்துவிட்டேன். தற்போது எனது கோபம் அனைத்தையும் அடக்க கற்றுக்கொண்டேன். இனி வேறொரு சிம்ஹாவை நீங்கள் பார்ப்பீர்கள். கார்த்திக் சுப்புராஜ் எனது நண்பர். அவருக்கு யார் தேவை, தேவை இல்லை என்பது தெரியும்" என்று கூறினார்.
சலார் 2 விரைவில்
இதன் வாயிலாக பிரபாஸ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் 2 திரைப்படம் விரைவில் படப்பிடிப்பு தொடங்கி திரைக்கு வருவது உறுதியாகி இருக்கிறது. இந்த அப்டேட் கொடுத்த பாபி சிம்ஹாவை பிரபாஸ் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியன் 2 படத்தின் பாடல்; யூடியூப் ட்ரெண்டிங்கில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை..!