திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: தள்ளிபோகிறதா இந்தியன் 2 ரிலீஸ்? ரசிகர்கள் கவலை.!
ஷங்கர் இயக்கத்தில், நடிகர்கள் கமல் ஹாசன், பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பாபி சிம்ஹா உட்பட பலரும் நடித்துள்ள திரைப்படம் இந்தியன் 2 (Indian 2).
லைகா ப்ரொடக்சன் தயாரிப்பில், அனிரூத் இசையில் உருவாகியுள்ள இப்படம் நீண்ட ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்தியன் படத்துக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து, அப்படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது.
13 ஜூன் 2024 அன்று படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் தேவையான பணிகளை விறுவிறுப்புடன் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படம் ரிலீஸ் ஜூன் மாதத்தில் இருந்து ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை எனினும், திரைவட்டாரங்களில் தகவல் கசிந்துளளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.