பிளாக்பஸ்டருக்கு தயாரா? ரீ ரிலீஸாகும் இந்தியன் திரைப்படம்.. இன்று டிரெய்லர் வெளியீடு..!!



Indian re release date announced today trailer release

கடந்த 1996ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, ஊர்மிலா, சுகன்யா, மனோரமா, கவுண்டமணி, செந்தில், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம் இந்தியன். 

இப்படம் ஊழலுக்கு எதிராக, லஞ்சத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்யும் ஓய்வு பெற்ற சுதந்திரப் போராட்ட வீரரான சேனாபதியை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.

Indian movie

இந்தியன் ரீ ரிலீஸ்

இப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இந்தியன் படத்தின் ரீ ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார். வரும் ஜூன் 7ம் தேதி படம் ரீ ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியன் 2 படத்தின் பாடல்; யூடியூப் ட்ரெண்டிங்கில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை..!

இன்று டிரெய்லர் வெளியீடு

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆக உள்ளதாக அவர் தெரிவித்திருக்கும் நிலையில், இன்று தெலுங்கில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியன் 2 ரிலீஸ்

மேலும் இந்தியன் 2 திரைப்படம் இந்த மாதம் வெளியாகும் என்று முன்னரே கூறிய நிலையில், இந்தியன் படத்தின் தொடக்கமாக இந்தியன் 2 இருப்பதால் தற்போது ரீ ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: ஹோம்லி லுக்குக்கு பாய்., கவர்ச்சிக்கு ஹாய்.. கடற்கரையில் கவர்ச்சி காட்டும் மடோனா.! அசத்தல் வீடியோ உள்ளே.!!