மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குறும்புக்கார தனுஷ்.! மாமனார் நடிக்கும் திரைப்படத்திற்கு எண்டு கார்டு போட போறாரா.?
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி தனுஷின் முன்னாள் மாமனாரான ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, வெளியாகும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்சமயம் இந்த படத்தின் வெளியிட்டு தேதியை பட தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் மாற்றியமைத்திருக்கிறது.
ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா இயக்கி, ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனாலும் கேப்டன் மில்லர் பட குழுவினர் வெளியிட்ட அறிவிப்புக்குப் பிறகு எதிர்வரும் வருடம் பொங்கல் பண்டிகையின்போது ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் வெளியிடப்படும் என்று ஐஸ்வர்யா அறிவித்திருந்தார்.
இத்தகைய சூழ்நிலையில் தான் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார் ஆகியோர் இணைந்து நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் எதிர்வரும் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது வெளியாகும் என்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு, தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு, சற்றே அதிர்ச்சி வழங்கியிருக்கிறார். இந்த விவகாரத்தை தெரிந்து கொண்டதன் காரணத்தால் தான் லால்சலாம் திரைப்படத்தின் வெளியிட்டு தேதியை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மாற்றியமைத்தாரா? என்றும் சமூக வலைதளவாசிகள் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.
ஆனால் இந்த பிரச்சனைக்கு நடுவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள அயலான் திரைப்படத்தின் நிலைமை எப்படி இருக்க போகிறது என்பதுதான் மிகப்பெரிய விஷயமாக தற்போது உள்ளது. கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கும், லால் சலாம் திரைப்படத்திற்கும் விநியோகஸ்தர்கள் அதிக முக்கியத்துவம் வழங்கினால், அயலான் திரைப்படத்தின் நிலை பரிதாபமாகத்தான் இருக்கும் என்று சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.