'லவ் டுடே' இவானா படத்தின் பெயரை திடீரென மாற்றிய படக்குழு.. ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!
இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான நாச்சியார் என்ற திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்ததில் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் இவானா. இதனைத் தொடர்ந்து இவர் நடித்த லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
இதன் மூலம் தமிழ் ரசிகர்களையே மிகவும் பிரபல நடிகையனார். சமீபத்தில் தோனி தயாரிப்பில் வெளியான எல்ஜிஎம் திரைப்படத்தல் ஹரிஷ் கல்யாணத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது இவர் கள்வன், செல்பிஷ் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது இயக்குனர் பாலா உதவியாளர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு முதலில் காம்ப்ளக்ஸ் என பெயர் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பெயர் 'மதிமாறன்' என மாற்றப்பட்டு ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் வெங்கட் செங்குட்டுவன், ஆராத்யா, எம் எஸ் பாஸ்கர், ஆடுகளம் நரேன், பவா செல்லத்துரை, பிரவீன் குமார், சுதர்சன் கோவிந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.