மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரு துண்டுக்கா இந்த அக்கப்போரு..குயின்சியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஜனனி.! என்னதான் நடந்தது?? வைரல் வீடியோ..
விஜய் டிவியில் நடிகர் கமல் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் 6வது சீசன் கடந்த மாதம் அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. இதன் முதல் வார இறுதியில் எலிமினேஷன் எதுவுமில்லாத நிலையில் 2வது வாரம் ஜிபி முத்து நிகழ்ச்சியில் இருந்து தானாகவே வெளியேறினார். அவரை தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் சாந்தி எலிமினேட்டானார்.
3வது வாரமான கடந்த வார இறுதியில் அசல் குறைந்த வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டில் 18 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வார தலைவராக மணிகண்டன் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அசீம், ஆயிஷா, விக்ரமன், கதிரவன் மற்றும் ஷெரினா ஆகியோர் எலிமினேஷனுக்காக போட்டியாளர்களால் நாமினேட் செய்யபட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஜனனி
குயின்சியின் டவலை எடுத்து பயன்படுத்தியுள்ளார். அதற்கு அவர் எனது டவலை ஏன் எடுத்தீங்க. என் அம்மா, தம்பி கூட என் டவலை தொடமாட்டார்கள். அது எனக்கு பிடிக்காது என கூறியுள்ளார். உடனே ஜனனி தெரியாமல் எடுத்ததாக கூறுகிறார். குயின்சி தொடர்ந்து பேசவே ஜனனி அவர் காலில் விழுகிறார்.
ஆனாலும் குயின்சி நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருக்க ஜனனி கோபமாக கையிலிருந்த காபி கப்பை போட்டுடைத்துள்ளார். அதனை தொடர்ந்து சக போட்டியாளர்கள் அவர்களை சமாதானம் செய்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.