முகூர்த்தக்கால் நட்டாச்சு.. நடிகை ரம்யா பாண்டியன் வீட்டில் மீண்டும் விஷேசம்.! வைரல் புகைப்படங்கள்!!



ramya-pandian-brother-pre-marriage-rituals-photos-viral

தமிழில் டம்மி டப்பாசு என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். தொடர்ந்து அவர் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்திருந்தார். மேலும் அவர் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கங்களில் போட்டோசூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வந்தார்.

தொடர்ந்து ரம்யா பாண்டியன் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதை கவர்ந்தார். பின் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ரம்யா பாண்டியனுக்கு தனது காதலர் யோகா பயிற்சியாளரான லவ்ல்  தவான் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது ரம்யா பாண்டியன் வீட்டில் மற்றொரு திருமணம் நடைபெற உள்ளது. அதாவது அவரது தம்பி பரசுவுக்கு இன்னும் சில தினங்களில் திருமணம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அவர்கள் வீட்டில் முகூர்த்தக்கால் ஊன்றுதல், நலங்கு வைத்தல் போன்ற சடங்குகள் ஆரம்பமாகியுள்ளது. இந்த புகைப்படங்களை நடிகர் ரம்யா பாண்டியன் மகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 

இதையும் படிங்க: கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!


இதையும் படிங்க: விஷாலுடன் திருமணமா.? 15 வருட காதல் பற்றி ஓபனாக பேசிய நாடோடிகள் நடிகை.!