பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
விஷாலுடன் திருமணமா.? 15 வருட காதல் பற்றி ஓபனாக பேசிய நாடோடிகள் நடிகை.!

காது கேளாத நடிகை
சசிகுமாரின் நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர்தான் நடிகை அபிநயா. இவர் வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத போதும் தனது நடிப்பு திறமையால் அசத்தி இருந்தார். இதன் பின்னர், அவருக்கு ஈசன், மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது நிறைய படங்களில் படு பிஸியாக அவர் நடித்து வருகின்றார்.
சமீபத்திய பேட்டி
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் தனது பர்சனல் வாழ்க்கை குறித்து தெரிவித்து இருக்கிறார். அதில், தனது பெற்றோர்கள் பற்றிய பல்வேறு நினைவுகளை பகிர்ந்து கொண்ட அவர் தனது 15 வருட காதல் பற்றிய தகவல்களையும் பகிர்ந்து இருக்கிறார்.
இதையும் படிங்க: அப்படிப்போடு.. தெலுங்கிலும் ரிலீசாகும் மதகஜராஜா.. அமெரிக்காவில் ரிலீஸ் அறிவிப்பு.!
15 வருட உறவு
அவர் அளித்த பேட்டியில், "நான் இப்போது ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன். என்னுடைய சின்ன வயது நண்பரை தான் நான் திருமணம் செய்து கொள்ள போகிறேன்.
15 வருடமாக இந்த உறவு தொடர்ந்து வருகிறது. அவரிடம் என்னால் எதையும் மறைக்காமல் உண்மையாக பேச முடியும். என்னை பற்றி அவர் ஜட்ஜ்மெண்ட் எல்லாம் வைத்துக் கொள்ள மாட்டார்.
விஷால் தங்கமானவர்
நான் இன்னும் செய்ய வேண்டிய விஷயம் நிறைய இருக்கு. இப்போதைக்கு கல்யாணத்தை பற்றிய எந்த பிளானும் இல்லை. விஷால் மிகவும் தங்கமான மனிதன். மிகவும் பாசிட்டிவான ஆள். என்னிடம் சைன் லாங்குவேஜ் எல்லாம் கற்றுக் கொடுக்கச் சொல்லி கேட்பார். நாங்கள் செட்டில் ஒன்றாக தான் சாப்பிடுவோம். அவர் எனக்கு நெருங்கிய நண்பர்.
வயித்து பிழைப்புக்காக வதந்தி
எங்களை பற்றி வரும் வதந்தி மிக முட்டாள்தனமானது. விஷால் எனக்கு ப்ரபோஸ் செய்ததாகவும், நான் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகிறது. இதையெல்லாம் வயித்து பிழைப்பிற்காக வதந்தியாக கிளப்பி விடுகிறார்கள். என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். நீங்கள் சந்தோஷமா இருந்தால் சரி தான்." என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மத கஜ ராஜா படத்தின் அசத்தல் கலாட்டா கிலிம்ப்ஸ்; வீடியோ உள்ளே.!