மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒருவழியாக அகிலன் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு.! மார்ச் மாதம் ஜெயம் ரவி ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட் !
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது இவர் அகிலன் என்ற படத்தில் நடித்து வந்தார்.
பூலோகம் திரைப்படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் மற்றும் ஜெயம் ரவி கூட்டணி மீண்டும் அகிலன் திரைப்படத்திற்காக இணைந்தது. இந்தத் திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர். துறைமுக கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் மாதமே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக வெளியாவதாக இருந்தது.
இத்தனை படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் தூத்துக்குடி துறைமுகம் மற்றும் சென்னை காசிமேட்டில் நடைபெற்றன. கடந்த ஆண்டு இத்திரைப்படத்தின் 'ஃபர்ஸ்ட் லுக்' மற்றும் 'டீசர்' வெளியாகி ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆனால் சில காரணங்களால் இந்தப் படத்திற்கான ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்நிலையில் படக்குழு அதிகாரப்பூர்வமாக தற்போது ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறது.
இதன்படி வருகின்ற மார்ச் மாதம் 10 ஆம் தேதி அகிலன் திரைப்படம் திரைக்கு வர இருப்பதை படக்குழு மற்றும் படத்தின் நாயகன் ஜெயம் ரவி ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த செய்தியை பகிர்ந்துள்ள ஜெயம் ரவி படம் வருகின்ற மார்ச் மாதம் பத்தாம் தேதி துவங்க உள்ளதாக அறிவித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து அவர் 'தனி ஒருவன் 2' மற்றும் 'இறைவன்' ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.