#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட.. ஜித்தன் ரமேஷுக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகளா! எவ்ளோ கியூட்டா இருக்காங்க பார்த்தீர்களா!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்ற நிலையில் கடந்த ஜனவரி 17 முடிவுக்கு வந்தது. இதில் மக்களின் பேராதரவுடன், அதிக வாக்குகளை பெற்று ஆரி வெற்றியாளரானார். மேலும் பாலாஜி இரண்டாவது இடத்தையும், ரியோ மூன்றாவது இடத்தையும் பெற்றனர்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் ஜித்தன் ரமேஷ். இவர் தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு ஆர்.கே வின்சென்ட் செல்வா இயக்கத்தில் வெளிவந்த ஜித்தன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அவரை அனைவரும் ஜித்தன் ரமேஷ் என அழைத்தனர். இவர் நடிகர் ஜீவாவின் சகோதரர் ஆவார். ரமேஷ் 10ற்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் அவை எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை.
இந்த நிலையிலேயே அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கும் அவர் இருக்குமிடம் தெரியாமல் எந்த பிரச்சினையிலும் தலையிடாமல் அமைதியாகவே இருந்து வந்தார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜித்தன் ரமேஷ் அண்மையில் தனது மகன் மற்றும் மகளுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.