#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நிறைய பேசியிருக்கேன்.. தளபதி விஜய் அப்படிபட்டவர்தான்.! நடிகர் ஜூனியர் என்டி.ஆர் ஓபன் டாக்! வைரலாகும் வீடியோ!!
பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவான திரைப்படம் ஆர்ஆர்ஆர். மேலும் இதில் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவான இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 7ஆம் தேதி வெளியாக உள்ளது.
ஆர்ஆர்ஆர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ளது. இந்நிலையில் இயக்குனர் ராஜமௌலி, ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் மூவரும் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். அப்பொழுது தளபதி விஜய் குறித்து கேட்டநிலையில், அதற்கு ஜூனியர் என்.டி.ஆர் பதிலளித்துள்ளார்.
❤️ THALAPATHY ❤️
— Vijay Television (@vijaytelevision) December 31, 2021
RRR Special - நாளை மதியம் 2:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #RRRSpecial #Vijay #NewYearSpecial #NewYear2022 pic.twitter.com/fu0NJMmvE9
அவர் கூறியதாவது, நடிகர் விஜய் சூப்பர் ஸ்டார், அன்பான மனிதர். நான் அவரிடம் நிறைய முறை பேசியுள்ளேன். மாஸ்டர் படத்திற்கு பிறகு போனில் பேசினேன். அவர் பெரிய நடிகர். மிகவும் அருமையான மனிதர். தலைக்கனம் இல்லாமல் சாதாரணமாக இருப்பார். என்னைவிட சீனியர். அவரிடம் நிறைய கற்றுக் கொள்ளலாம். எனக்கு அவரது நடனம் மிகவும் பிடிக்கும் எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது