மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"விஜயுடன் நடிக்க விருப்பமில்லை" இளைய தளபதியின் அடுத்த படத்தில் நடிக்க மறுத்த ஜோதிகா.?
விஜயின் 'லியோ' படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்நிலையில், விஜய் தனது 68ஆவது பட இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கைகோர்க்கப் போவதாக செய்திகள் உறுதியாகியுள்ளன.
ஏ ஜி எஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் 'தளபதி-68' என்ற தற்காலிகத் தலைப்பில் மிகப் பிரம்மாண்டமாக படம் உருவாகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாகவும், விஜய்க்கு ஜோடியாக யார் நடிப்பது என்றும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிகிறது. முதலில் ஜோதிகாவைக் கேட்டதாகவும், அவர் மறுப்பு தெரிவித்ததால், இப்போது சிம்ரனுடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தெரிகிறது.
ஏற்கனவே மெர்சல் படத்தில், நித்யா மேனன் கதாப்பாத்திரத்தில் நடிக்க ஜோதிகா மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து தற்போது ரசிகர்கள் 'ஜோதிகாவுக்கு விஜய் மீது அப்படி என்ன கோபம்' என்று கேட்டு வருகின்றனர்.