தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
யாருமே யோக்கியன் இல்ல.. அந்த இரண்டு நடிகர்களால்.., உண்மையை போட்டுடைத்த காதல் சுகுமாரால் கலவரமாகும் சினிவட்டாரம்..!!
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் சுகுமார். இவர் கடந்த 2004-ல் வெளியான காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார். காதல் திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரமாக அறிமுகமாவதற்கு முன்பு விருமாண்டி திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.
அதன் பின்னர் வசூல்ராஜா எம்பிபிஎஸ், என் ஆளோட செருப்பை காணோம் உட்பட சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் இறுதியாக கடந்த 2018-ஆம் ஆண்டு மனுசனா நீ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் இவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், "கமல்ஹாசன் நடித்த விருமாண்டி திரைப்படத்தில் டைவ் அடிக்க வேண்டும் என்று என்னை அழைத்தார்கள்.
நான் டைவ் அடித்து காண்பித்த போது கமல்ஹாசன் ஜிம்னாஸ்டிக் தெரியும் என்று என்னிடம் காட்ட வேண்டாம் என்று கலாய்த்தார். அதன் பின்னர் அவ்வப்போது என்னை டைவ் அடிக்க கூறுவார்கள். வடிவேலு போல நானும் மிமிக்ரி செய்வேன். அதனால் என்னை சின்னத்திரை வடிவேலு என்றும் அழைத்தார்கள்.
ஒரு பக்கம் வடிவேலு, மற்றொரு பக்கம் விவேக் என இரண்டு டீம் இருந்து வந்தது. என்னால் எந்த பக்கமும் போக முடியவில்லை. அவர் நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என்றும் என்னை சுட்டிக்காட்டி கூறியுள்ளார்கள். நடிகர்கள் சில நேரம் அரசியல்வாதிகள் போலவும் நடந்து கொள்வார்கள்.
மேலும் அவர்கள் என்னை வாழவிடவில்லை என்று யாரையும் சுட்டிகாட்டாமல் தெரிவித்துள்ளார். சினிமாவில் ஆண்களுக்கே இந்த நிலை என்றால் பெண்களின் நிலைமை கவலைக்கிடம் தான். சினிமாவிலும் அரசியல் நடக்கிறது" என்று தெரிவித்தார்.