பிகிலுக்கு முன்பே தணிக்கை சான்றிதழுடன் தயாரான கார்த்தியின் கைதி திரைப்படம்!



Kaithi karthi

மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள திரைப்படம் தான் கைதி. இந்த படத்தில் கார்த்திக் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா முதன் முதலில் தமிழில் அறிமுகமாகவுள்ளார். 

மேலும் இந்த படத்தில் சாம். சி. எஸ் இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க ஆக்சன் கலந்த திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் விஜயின் பிகில் படம் வெளியாகும் அதே சமயத்தில் கைதி படமும் வெளியாகவுள்ளது.

Karthi

ஆனால் பிகில் படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் பெறாத நிலையில் கார்த்தியின் கைதி திரைப்படம் U/A சான்றிதழை பெற்று ரிலீசுக்கு தயாராகி உள்ளது. தற்போது அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.